போலி தகவல்களை சமர்ப்பித்து, கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யுவதியொருவர், இன்று (18) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், முல்லைத்தீவு- மாங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (18) அதிகாலை 3.45 மணியளவில் கட்டார் நோக்கி புறப்படவிருந்த கியூ.ஆர்.669 என்ற விமானத்தில் பயணிப்பதற்கு இந்த யுவதி விமானநிலையத்துக்கு வருகைத் தந்துள்ளார்.
இதன்போது, அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளதுடன், இந்த யுவதியால் விமான நிலைய அதிகாரிகளுக்கு சமர்ப்பித்துள்ள பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையும் போலியானதென கண்டறியப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட யுவதியிடம் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.