மன்னார் இரணை இலுப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு தலா 3000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரால் வழங்கப்பட்டது.
புதிய கல்வியாண்டுக்கு செல்லும் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தேவையுடைய ஆயிரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட செயற்திட்டத்தின்கீழ் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நியூசிலாந்து வன்னி நேயம் அமைப்பினர் வழங்கிய நிதி அனுசரனையூடாக இந்த விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கிளிநொச்சி் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டத்திற்கு நிதி அனுசரனையை நியூசிலாந்து வன்னிநேயம் அமைப்பினர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.