மதுபானசாலை அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான்பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறுதெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின்முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள்தீவிரமடைந்துள்ள நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது.
தமிரசுக்கட்சி தலைவராக ஜனநாயக ரீதியில் போட்டியில் வெற்றிபெற்றிருந்தேன். தலைவராக தெரிவு செய்த என்னை எமது கட்சிக்குள்வழக்குக்போட்டு செயற்படாது தடுத்தனர். மக்கள் இது தொடர்பாக செய்திசொல்ல முற்படுகின்றனர்.
நாங்கள் செல்லும் இடங்களிலும் சொல்கின்றனர். எமது கட்சிக்குள் உள்ளமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சேறு பூசும் முயற்சியில் இங்குள்ளமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடன் சேர்ந்து இன்னொருவரும் சேர்ந்துஎனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய நிலையுள்ளது. மக்களுக்குசொல்லி வருகின்றேன் நான் கிளிநொச்சியிலிருந்து யாருக்காவது பார்அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் அதனை உறுதிப்படுத்தினால்அரசியலிருந்து என்னை விலக்கி விடுங்கள்.
அதை எல்லாம் செய்ய முடியாதவர் ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து பார்தொடர்பான விபரங்களை யாரோ ஒருவர் தேடி எடுத்திருக்கிறார். அதனைஒருவர் என்னுடைய கடிதத்தலைப்பை பயன்படுத்தி போலியாக நான் அனுமதிகோரியதாக தெரிவித்து காட்டியிருக்கிறார்.
அதிலே சித்தார்த்தனுடைய பெயரும் குறிப்பிட்டிருக்கிறது. என்னுடைய கடிததலைப்பில் நான் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து சித்தார்த்தனுடைய பெயர்எப்படி வரும் இதன் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வார்கள். பொலிஸ்நிலையத்தில் உரியவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.
மக்களிடம் ஒன்றை சொல்கிறேன் மக்கள் என்னை நம்புங்கள் மதுபானத்திற்கானஅனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவுசெய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் என தெரிவித்தார்.