முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நான்கு லட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் பூமணி அம்மா அறக்கட்டளையினரால் வழங்கி வைக்கப்பட்டது.
பூமணி அம்மா அறக்கட்டளை மற்றும் சர்வதேச தமிழ் வானொலி(ITR), பிரான்ஸ்-இலங்கை ஆகியவற்றின் தீவிர ஆதரவாளர்கள் செல்லையா கதிர்காமநாதன் குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில், அறக்கட்டளையின் செயற்பாட்டாளர் இராதாகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டின் ஊடாக இந்த உதவித் திட்டம் வழங்ககப்பட்டது.
அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் நிதிக் கொடையாளர்களுடன் இணைந்து,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை செயலாளர் N.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,நிர்வாகசபை உறுப்பினர் ய.தேவதாஸ் ஆகியோரால் முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பத்தொன்பது கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட, போரினால் அங்கவீனப்பட்ட,வறிய நிலை,மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என நூறு குடும்பங்களுக்கு இந்த உதவித்திட்டம் வழங்கப்பட்டது.
குடும்பம் ஒன்றிற்கு, நான்காயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் படி, நான்கு லட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள்,மூங்கிலாறு,தேராவில் பகுதியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வுக்கு தாமரை மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் திரு சி.சிவகிருஷ்ணன்(ரூபன்)தலைமை வகித்து,அனுசரணை வழங்கி இருந்தார்.
நிகழ்வில் முல்லைத்தீவு விவசாய கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் எஸ்.சசிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக சமூகசேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.விஜிதா,எஸ்.அருள்வதனி,சமூக சேவையாளரான அ.சிவா ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.