வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக, பாடசாலை மாணவர்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வேலணை மத்திய கல்லூரியின் பிரதான நுழைவாயிலின் முன்பாக,நேற்று செவ்வாய்க்கிழமை(ஜூலை 25) காலை ஒன்றுகூடிய மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும்,சில ஆசிரியர்களுக்கும் இடையில் முரண்
பாடான நிலை ஏற்பட்டது.
வேற்று மதத்தைச் சார்ந்த ஒருவரை அதிபராக நியமிப்பதற்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துவருவதை சுட்டிக்காட்டியே,மேற்படி போராட்டம் முன்னெடுக்கப் பட்டது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் கருத்து வெளியிட்ட போது,எமது கல்லூரிக்கு வடமாகாண கல்வி அமைச்சினால், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் புதிய அதிபரொருவர் தெரிவு செய்யப்பட்டார்.
எமது பாடசாலை 80 வருடகால இந்துப் பாரம்பரியத்தை கொண்ட பாடசாலையாகக் காணப்படும் நிலையில்,புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்,பிற மதத்தைச் சார்ந்தவராக உள்ளார்.
எமது பாட சாலையில் கல்விகற்கும் மாண வர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதுடன்,வரலாற்றுப் பிரசித்தி மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திலும் எமது பாடசாலையின் சார்பில் வருடந்தோறும் திருவிழாவொன்றை செய்து வருகின்றோம்.
இந்த நிலையில் பாடசாலைக்கு வருகைதரும் அதிபர் எமது மதச் சம்பிரதாயங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் குறைந்தவர்.
ஆகையினால் அவரை மாற்றம் செய்து,இந்துப் பாரம்பரியங்களைக் கொண்ட அதிபரொருவரை நியமிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்கள் நேற்றுப் போராட் டத்தில் ஈடுபட்டபோது, சில ஆசிரியர்கள் மாணவர்களை அச்சுறுத்தி, போராட்டத்தைக் கலைக்க முற்பட்டதாகவும், சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸாரும் ஆசிரியர்களுக்கு சார்பாக நடந்து கொண்டதாகவும்,போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்
நனறி தினக்குரல்