அண்மையில் ஏற்பட்டபுரவிப் புயலினால் இலங்கையின் பலபாகங்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகியது அந்தவகையில் புங்குடுதீவுப் பிரதேசத்தினை இப்புரவி புயல் புரட்டிப்போட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
புங்குடுதீவின் பலபகுதிகள் இத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டதுடன் குறிப்பாக 100 மேற்பட்ட குடும்பங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளனர் 96 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேர் பாதிப்படைந்துள்ளனர் இவர்களில் அனேகர் புங்குடுதீவு மகாவித்தியாலயம், புங்குடுதீவு சவேரியார் ஆலயம், போன்றவற்றில் தங்கியிருப்பதுடன் காந்தி கிராமமக்கள் பாதிப்பின் மத்தியிலும் தங்கள் வீடுகளினை விட்டு வரமுடியாதவர்களாக வீடுகளிலேயே தங்கியிருக்கின்றனர்.
பாதிப்படைந்த மக்களினை மேற்குறிப்பிட்ட இடங்களில் பிரதேசசெயலாளர், கிராமசேவையாளர், மற்றும் நலன்புரிச்சங்க அமைப்பினர் அவர்களின் உதவியுடன் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுளளனர் இவர்களுக்கான சமைத்த உணவினை பிரதேசசெயலகமும் புங்குடுதீவு நலன்புரிச் சங்கமும் இணைந்து வழங்கி வருகின்றனர். சுகாதார உத்தியோகத்தரின் வழிகாட்டலில் உணவு சமையல் செய்யப்பட்டு அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்று வழங்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் செயற்பாட்டின் படி 03 நாட்களுக்கே இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படும் எனவும் ஆயினும் 03நாட்களில் இவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பக் கூடிய நிலமை மிககுறைவாகவே காணப்படுகின்றது எனவும் பாடசாலைகளில் தங்கியிருப்பதால் அடுத்;து வரும் நாட்களில் பாடசாலைகளை நடாத்துவது சிரமம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினால் இவர்களுக்கான பாதுகாப்பு உணவுதேவைகள் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் புங்குடுதீவு உலகமையம் ஊடாகவும் சில அன்பர்களது ஒத்துழைப்புடன் சிலஉதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்
வழங்கப்படும் உதவிகள் போதியளவு காணப்படவில்லை எனவும் பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் பெரும் சிரம்களை எதிர் கொள்கின்றார்கள் கொரோன பாதுகாப்பு செயற்பாடுகள் டெங்கு பாதுகாப்பு செயற்பாடுகள் போன்றவற்றினை கடைப்பிடிப்பது கடினமாக காணப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை விடபுங்குடுதீவில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது இதனால் எதிர்கால இவர்களது உணவுப்பாதுகாப்பு பொறிமுறையும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது,
பல்வேறு பாதிப்புக்கள் நிகழ்ந்தபோதும் அரசியல் கட்சிகளோ அரசதலைவர்களோ சமூகஊடகங்களோ தங்களை திரும்பிப் பார்க்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
குறிப்பாக அண்மையில் 25 குடும்பங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் திறப்பு விழாவும் பெரிதாக இடம் பெற்று மக்களுக்குகையளிக்கப்பட்டது. இவ் வீடுகள் கட்டப்பட்ட இடங்கள் யாவும் வயல் காணிகள் எனவும், இத்திட்டத்தின் ஆரம்பத்திலேயே இவ்விடம் பொருத்தமற்றது என மக்களால் குற்றம் சுமத்தப்பட்டபோதும் அதனை மேற் கொண்ட அரச அதிகாரிகள் அதனைகருத்திற் கொள்ளவி;ல்லை எனவும் தற்போதையை மழையினால் அனைத்து வீடுகளும் சுற்று வட்டாரங்களும் நீரில் முழ்கியுள்ளதுடன் அவ் வீட்டில் குடியிருந்த அனைவரையும் படகு மூலமே கரைக்கு கொண்டு வந்தாகவும் கிணறுகள் யாவும் நிறைந்து மழைநீரில் முழ்கியுள்ளதாகவும் வீடுகள் யாவற்றுக்குள்ளும் தண்ணீர் உட்புகுந்துள்ளதாகவும் நீர் வடிந்து மீளக்குடியமரக் கூடிய நிலையேற்படுவதற்கு நீண்டநாட்கள் செல்லும் எனவும் இம் மக்களுக்குவருடம் தோறும் ஏற்படக் கூடியபிரச்சனைஎனவும் மக்கள் வீட்டுத்திட்டத்தினை மேற்கொண்ட தரப்பினரை குற்றம் சுமத்தினர்
புங்குடுதீவின் வயல் நிலங்கள் பாடசாலைகள் பாடசாலை விளையாட்டு மைதானங்கள் வீதிகள் பேன்ற பல்வேறு பகுதிகள் இப்புரவித் தாக்கத்தினால் பழுதடைந்துள்ளமையால் அரச திணைக்களங்கள் அரசசார்பற்ற திணைக்களங்கள் புங்குடுதீவு சார்ந்தபுலம் பெயர் உள்ளுர் அமைப்புக்கள் ஒற்றுமையுடன் இணைந்து எதிhகால்தில் ஒன்றுபட்டு உழகை;க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.