புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்துக்கென புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் நேற்றைய தினம் (மே17) காலை சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஆலய பங்குத் தந்தை மற்றும் அயல் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர் மற்றும் சவேரியார் ஆலய பங்கு மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை சித்திரத் தேரை வடிவமைத்த சிப்பக் கலைஞர் மற்றும் ஏனைய கலைஞர்களும் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.