புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவள விழாக்கொண்டாட்டம் – 2025 இற்கான நிகழ்வுகளின் தொடரில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியுடன் நேற்றையதினம் (டிசம்பர் 07) கோலாகலமாக ஆரம்பமாகியது.
சுழற்சி முறையில் நடைபெற்ற போட்டிகளில் அரை இறுதிப் போட்டியில் புங்குடுதீவு சண்ஸ்ரார் அணியினரும், புங்குடுதீவு இருபிட்டி விளையாட்டுக்கழக A அணியினரும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
இறுதிப்போட்டி 2025- தைமாதம் 10ம்திகதி நடைபெறும் என பவளவிழாஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புங்குடுதீவு இருபிட்டி சனசமூகநிலையம் பவளவிழாக்கொண்டாட்டம் – 2025 இன் ஆண்களுக்கான
கரப்பந்தாட்டம் (செற்றப்) போட்டியில் பங்குபற்ற விரும்பும் அணிகள்0705182228 எனும் வட்ஸ்அப் இலக்கம் ஊடாக டிசம்பர் 09 இற்கு முன்னர் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.