புங்குடுதீவு இறுப்பிட்டி சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தின் 109ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொங்கல் விழாவும், கா.பொ.த. சாதரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது.
புங்குடுதீவு இறுப்பிட்டி சித்திவிநாயகர் மகாவித்தியாலமானது 1914 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வேலாயுதம் விஸ்வலிங்கம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வில் சூழகம் அமைப்பின் செயலாளரும் , மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் தீவக இணைப்பாளருமான கருணாகரன் நாவலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக பாடசாலையின் நிறுவுநரின் பேரனாகிய யாழ்ப்பாணம் திடீர் மரண விசாரணை அதிகாரி திரு. ந பிரேம்குமார் கலந்து கொண்டார்.
பொங்கல் விழா மேல்மருத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் அனுசரணையில் நடைபெற்றது. மேல்மருத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் தீவக ஒருங்கிணைப்பாளர் க.நாவலன் நிகழ்வை ஒழுங்கமைத்திருந்தார். சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) அனுசரணையில் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றிருந்தது .