வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் செயலாளருமாகிய கருணாகரன் நாவலன் அவர்களின் தீவிர முயற்சியால் புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரம் ( கேரதீவு ) , ஏழாம் வட்டாரம் ( ஊரதீவு ) ,எட்டாம் வட்டாரம் ( மடத்துவெளி ) பகுதிகளில் காணப்படுகின்ற மின்கம்பங்களில் LED மின்விளக்குகள் பொருத்தப்படுகின்ற செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன .
மேற்படி பிரதேசங்களை சேர்ந்த புலம்பெயர் உறவுகளான திருமதி .சுரேஷ்குமார் ஆனந்தி , திரு . நவரட்ணம் சிவானந்தன் ஆகியோர் புலம்பெயர் உறவுகளிடம் சேகரித்த ஆறு லட்சம் ரூபாய் நிதியில் 150 W சக்தியுடைய எட்டு LED மின் விளக்குகளும் , 50 W சக்தியுடைய 47 LED மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன . காலநிலை சீர்கேட்டின் மத்தியிலும் வேலணை மின்சார சபையினர் ஊடாக மிகுந்த சிரமத்தின் மத்தியில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இப்பகுதிகளில் அண்மைக்காலங்களில் நடைபெற்றுவந்த சில சட்டவிரோத செயற்பாடுகளை ( பூசகர் படுகொலை , கால்நடைகளை கடத்திச்செல்லுதல் ) மென்மேலும் நடைபெறாவண்ணம் கட்டுப்படுத்தும் நோக்குடனும் , இருள் சூழ்ந்து காணப்பட்ட வீதிகளை ஒளிமயமாக்கும் நோக்குடனும் , வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்குடனும் வேலைணைப் பிரதேச சபை உறுபபினா் கருணாகரன் நாவலன் அவா்களது முயற்சியின் பயனாக இத்திட்டம் செயற்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.