நெடுந்தீவு வெல்லைப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 26 கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது
நேற்றையதினம் (06/12) இரவு கடற்படையினரால் குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 62 கிலோ எடையுள்ள கஞ்சா சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகுதி சட்டநடவடிக்கைக்காக ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரியவருகின்றது.

