நெடுந்தீவு பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியானநேற்றுமுன்தினம் (ஒக். 25) இரவு நண்டு வலைகள் இந்திய மீனவர்களால்சூறையாடப்பட்டுள்ளது.
அத்துமீறிய இந்திய மீனவர்களின் கடற்தொழில் காரணமாக தீவக மீனவர்கள்தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையிலும் மீன்வளம் குறைந்துவரும் நிலையிலும் மீனவர்களின் வாழ்வாதரத்தினை நகர்த்திச் செல்லகைகொடுத்து வந்த நண்டு வலை தொழிலின் உபகரணங்கள்சூறையாடப்பட்டமை அவர்களின் வாழ்வாதரத்தினை மேலும் நலிவடையசெய்துள்ளது.
இது விடயத்தில் கடற்தொழில்சார் திணைக்களம் மற்றும் மீனவ அமைப்புகள்கூடிய கவனமெடுத்து உபகரண இழப்புக்கான இழப்பீடுளை வழங்கவும்அத்துமீறிய இந்திய மீனவர்களின் தொழிலை நிறுத்தவும் ஆவன செய்யவேண்டுமென தொழில்வளம் இழந்து நிற்கும் தொழிலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை குறித்த தினத்தில் நயினாதீவு பிரதேச மீனவர்களின் பல இலட்சம்பெறுமதியான நண்டு வலைகளும் சூறையாடப்பட்டுள்ளமையும் இங்குசுட்டிக்காட்டத்தக்கதாகும்.