மகளீர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் பெண்கள் வலுவூட்டல் நிகழ்சித்திட்டம் ஊடாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் இன்று(ஓகஸ்ட் 28) வழங்கிவைக்கப்பட்டது.
நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான உபகரணங்களை பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி அவர்கள் இன்றைய தினம் வழங்கிவைத்தார்.