நெடுந்தீவில் கடந்த மாதங்களில் ஏற்பட்ட கடும் வரட்சி காரணமாக அங்குள்ள குதிரைகள் நீரின்றி அலைந்தமையை அறிந்த தீவின் ஆர்வலர்கள் அதற்கான ஒழுங்குகளை செய்து நெடுந்தீவின் வரலாற்று சொத்தான குதிரைகளை காத்துள்ள செயற்பாட்டினை பலரும் பாராட்டிவருகின்றனர்.
குதிரைகளுக்கான நீர் விநியோகம் செய்வதற்காக சுற்றுலாத்துறை சார்ந்து செயற்படுவோர், நலன் விரும்பிகள், புலம்பெயர் உறவுகள் மற்றும் அமைப்புகள் என மூன்று நிலைகளில்ஆர்வலர்கள் நிதி சேகரிப்பை மேற்கொண்டு இச்செயற்பாட்டினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சில வருடங்களாக வனஜீவராசிகள் திணைக்களம் குதிரைகளுக்கு தண்ணீர் இறைக்க நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு நிதியை வழங்கி வந்த போதும் இவ் ஆண்டுக்கான நிதி விடுவிக்கப்படவில்லை என யாழ் மாவட்ட அரச அதிபர் குறிப்பிட்டிருந்ததுடன், தாமதமாக கிடைத்த குறைந்த நிதி ஒதுக்கீட்டின் மூலமும் நீர் விநியோகம் செய்யப்பட்டிருந்தது.