நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியின் குருளை சாரணர்களின் நட்புறவுமுகாமும் விழிப்புணர்வு நடை பவனியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக். 06) நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி மெரினா சகாயம் தலைமையில் இடம்பெற்றஇந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிராம உத்தியோகத்தர் திருமதிச.ராஜீவ்பிரகாஷ் அவர்களும் , சிறப்பு விருந்தினராக உதவி மாவட்டஆணையாளர் (குருளை) திருமதி. பிறைசினி அருள்சந்திரன் அவர்களும் கலந்துசிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் நெடுந்தீவில் உள்ள
01. றோ.க.மகளிர் கல்லூரி
02. மாவலித்துறை றோ.க.த.க வித்தியாலயம்
03. சுப்ரமணிய வித்தியாலயம்
04. சீக்கிரியாம்பள்ளம் அ .த க பாடசாலை
05. ஸ்ரீஸ்கந்த வித்தியாலயம்
06. சைவப்பிரகாச வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து 97 குருளை சாரணர்களும், சாரணஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நட்புறவு முகாமில் குருளை சாரணர்களுக்கான ஆடல், பாடல், கட்டுக்கள், வர்ணம் தீட்டுதல், விளையாட்டுக்கள் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றமைகுறிப்பிடத்தக்கது.