நெடுந்தீவில் அனர்த்தத்தால் சேதமடைந்த மேற்கு வீதி தற்காலிகமாக செப்பனிடப்பட்டது!

SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மேற்கு பிரதான வீதியில் வெள்ளநீர் வழிந்தோடியதால் ஏற்பட்ட பாரிய பள்ளம் இன்று (16/12) மாலை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் முயற்சியால் தற்காலிகமாக நிரவப்பட்டு மக்களின் பாவனைக்குரியதாக மாற்றப்பட்டுள்ளது.

நெடுந்தீவின் வெள்ள இடர் நிலமைகளை பார்வையிடும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களது நேற்றைய  (15/12) வருகையின்போது இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்விடயம் முன்னுரிமப்படுத்தப்பட்டதன் வெளிப்பாடாக துரிதநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இவ் வீதி புனரமைப்புக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு வேலைகள் அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கவுள்ள நிலையில் தற்காலிக செப்பனிடலுக்கு அனுமதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்றது.

இதன்போது நெடுந்தீவு பிரதேச சபை செயலாளர், நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர், உப தவிசாளர், அலுவலர்கள் மற்றும் பிரதேச நலன்விரும்பிகள் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

Share this Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version