நயினை நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு கொரோனாவால் மரணம்
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருவும் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதியுமான சிவஸ்ரீ சம்பு மகேஸ்வரக் குருக்கள் நேற்று அதிகாலை உயிரிழந்திருந்தார்.
அவரது மரணத்தின் பின்னர் மாதிரிக் பெறப்படடு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பல நூற்றுக்கணக்கான கும்பாபிஷேகங்களையும் சங்காபிஷேகங்களையும் மகோற்சவக் கிரியைகளையும் முதன்மை குருவாக இருந்து பல தேசங்களிலும் ஆகம முறைப்படி நடத்தி சைவத் தமிழ் உலகிலும் அந்தண சமூகத்திலும் நிகரற்ற மதிப்பை சவஸ்ரீ சம்பு மகேஸ்வரக் குருக்கள் பெற்றிருந்தார்.
பன்மொழிப் புலமை மிக்கவரான மகேஸ்வர சிவாச்சாரியார், யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ஸ்ரீசக்கர யந்திர பூஜை பற்றிய நூலை எழுதியுள்ள சிவாச்சாரியார், ஆனைப்பந்தியில் அந்தணர்களுக்கான குருகுல உருவாக்கத்திலும் முனைப்புக்காட்டியதுடன், குருகுலத்தில் அந்தண மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் ஆகம வகுப்புகளுக்குச் சிறந்ததோர் வழிகாட்டியாக இருந்து பணியாற்றியமை குறிப்பிட்தக்கது.