சீரற்ற காலநிலையால் தடைப்பட்டிருந்த நயினாதீவு _குறிகட்டுவான் படகுச்சேவை நாளை (நவம்பர் 30) தொடக்கம் மீள ஆரம்பமாகவுள்ளது.
சனி(30/11) ஞாயிறு (01/12) ஆகிய தினங்களில் ஒருமணித்தியாலத்திற்கு ஒன்றுஎனும் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் திங்கட்கிழமையில்(02/12) இருந்து வழமை போன்று சேவை இடம்பெறும்என்பதனை பயணிகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றனர் நயினாதீவு படகுஉரிமையாளர் சங்கத்தினர்
நயினாதீவில் இருந்து முதல் படகுச்சேவை காலை 6:30மணிக்கும் குறிகட்டுவானில் இருந்து இறுதிப்படகுச் சேவை மாலை 05:00மணிக்கும் இடம்பெறும் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.