நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு புதிய ஆல்ட்ரா சவுண்டு ஸ்கனிங்இயந்திரம் இன்றையதினம் (டிசம்பர் 07 ) வைத்தியசாலையில் வைத்து வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் நயினாதீவு வைத்தியசாலையில் வைத்து நன்கொடையாளர்களால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர்கள் மற்றும் நன்கொடையாளர்கள், நலன்வரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
நயினாதீவு வைத்தியசாலையின் அவசர தேவையான ஆல்ட்ரா சவுண்டு ஸ்கனிங்இயந்திரத்தினை நயினை மக்கள் அறக்கட்டளை மற்றும் புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் நயினாதீவைச் சேரந்த ஒருவரின் நிதிப் பங்களிப்பில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பித்தக்கதாகும்.