வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தமகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று(ஜூன்07) காலை ஆலய அறங்காவலர் சபை காரியாலயத்தில் இருந்துபூஜை வழிபாடுகளுடன் கொடிசீலை, நாக பாம்பு வாகனத்தில் ஆலயத்துக்குஎடுத்துவரப்பட்டு, ஆலயத்தில் தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகளைதொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
மகோற்சவ காலத்தில் ஆலயத்துக்கு வருகை தரவுள்ள பக்தர்களுக்காக தரைமற்றும் கடல் போக்குவரத்து வசதிகள், தாக சாந்தி நிலையங்கள், அன்னதானம்என அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் பக்தர்களின்பாதுகாப்புக்காக ஆலய சூழலில் தற்காலிக பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு, சீருடை மற்றும் சிவில் உடையில் பெருமளவான பொலிஸார் கடமையில்ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து 15 தினங்கள் இடம்பெறவுள்ள திருவிழாவில் எதிர்வரும் ஜூன் 19இரவு சப்பர திருவிழாவும், மறுநாள் ஜூன் 20 பகல் தேர்த் திருவிழாவும், ஜூன் 21 காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளதுடன் தெப்பத்திருவிழா ஜூன்22 வெள்ளிக்கிழமை இரவு இடம்பெறவுள்ளது.