தீவக வலய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கானமென்பந்து துடுப்பாட்டப் போட்டியில் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம்தொடர்சியாக பத்தாவது தடவையாக வெற்றிபெற்று சம்பியனாகியுள்ளது.
இறுதிப்போட்டியில் இதனுடன் மோதிய நெடுந்தீவு மகாவித்தியாலய பெண்கள் அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது.
அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம் மற்றும் நெடுந்தீவு மகாவித்தியாலயம் என்பவற்றின் பெண்கள் அணிகள் மாகாணமட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை ஆண்கள் பிரிவுக்கான துடுப்பாட்டப் போட்டியில் காரைநகர் யாழ்றன் கல்லூரி முதலிடத்தினையும்,
காரைநகர் இந்து கல்லூரி இரண்டாம் இடத்தினையும், நெடுந்தீவு மகாவித்தியாலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.