புங்குடுதீவுப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து புங்குடுதீவு, வேலணை, நயினாதீவு நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளும மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைவாக நேற்றைய தினம் (ஒக்டோபர் 17) வேலணை புங்குடுதீவு நெடுந்தீவு நயினாதீவு பிரதேசங்களை சேர்ந்த 130 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அது தொர்பான முடிவுகள் யாவும் இன்றைய தினம் மாலையே முடிவுகள் வெளிவரும் எனவும் வேலணை சுகாதர சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆயினும் மிக விரைவில் புங்குடுதீவு முடக்க நிலை நீக்கப்படும் எனவும யாழ் மாவட்டத்தில் இருந்து அநாவசியமாக வெளி மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் இன்று ஊடகங்களுக்க கருத்து தொவிக்கும் போது மாவட்ட செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்