வவுனியா திருநாவற்குளம் கிராமம் இன்று மாலை (மே – 29) முதல் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருநாவற்குளம் கிராமத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 12 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கிராமத்தின் நடைபாதைகள் மற்றும் எல்லைகளில் பொலிசாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிராமத்திற்குள் நடமாட்டதை கட்டுப்படுத்தி கொரோனா பரம்பலை தடுப்பதற்காகவே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு கடமையில் இருக்கும் பொலிசார் தெரிவித்துளளனர்.
இந்நிலமையினைக் கருத்திற் கொண்டு நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டிபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தயவுடன் எமது கிராமத்துடன் தொடர்பை பேணியவர்கள் சமூக பொறுப்புடன் செயற்படுமாறு பணிவாக கேட்பதோடு, எமது கிராம உறவுகள் covid_19 பாதுகாப்பு விதிமுறைகளை உச்ச அளவில் பேணுமமாறு தெரிவித்துள்ளார்
அத்துடன் நிவாரண உதவிகள் அவசியம் தேவைப்படும் சூழல் நெருங்கியுள்ளதால் எமது கையிருப்பு போதுமானதாக இல்லாமையினால் நிவாரண பொதிகள் வழங்க விரும்பியவர்கள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.ரவி 0771396485 அவர்களுடடனோ அல்லது நகர சபை உறுப்பினர் காண்டீபன் தன்னுடனோ 0763806990 தொடர்பு கொண்டு மக்களுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.