அனலைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து தாக்குதல் நடத்தி கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கனடா அனலைதீவு கலாசார ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட குடும்பத்தினர் விடுமுறையில் சொந்த ஊரில் தங்கியிருந்தபோது வீடு புகுந்த வன்முறையாளர்கள் குடும்பத் தலைவரைக் கொடூரமாக தாக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.
இது அனலைதீவு மக்களுக்கும், புலம்பெயர் அனலைதீவு மக்களுக்கும் பாதுகாப்புத் தொடர்பான நம்பிக்கையீனத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
பொலிஸாரும், அனைத்து அரச துறையினரும் அனலைதீவு மக்களும் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வன்முறையாளர்களை கைது செய்யவும், இதுபோன்ற வன்முறைகள் மீண்டும் நடைபெறாது தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுகிறோம் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.