எழுவைதீவில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மூவர் படகு பழுதடைந்துள்ளதால் தமிழ்நாடு, வேதாரண்யம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளனர்.
ஆனைக்கோட்டை, குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய இடங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 6ஆம் திகதி காலை 9 மணியளவில் படலில் மீன்பிடிக்காகச் சென்றுள்ளனர்.
மதியம் 2 மணியளவில் படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்த அவர்கள், தமிழகத்தின் நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.