தந்தை செல்வா அவர்களின் 125 ஆவது ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா இடம்பெறவுள்ளது.
“எஸ். ஜே. வி. செல்வநாயகமும் தமிழ்த் தேசியவாதமும் “ எனும் தலைப்பிலான நூல் வெளியீடு எதிர்வரும் சனிக்கிழமை(ஒக். 26) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளகாத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வின் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.