நயினாதீவுக்கும் குறிகாட்டுவானுக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் நேற்று (மார்ச் 13) தடை செய்யப்பட்ட இழுவைமடியைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய இரு இழுவைப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த இழுவைப் படகுகளே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இரவு 9.30 மணியளவில் இழுவைமடி மீன்பிடியில் ஈடுபடுவதை அவதானித்த நயினாதீவு மீனவர்கள் அது தொடர்பில் கடற்றொழில் சங்கத்துக்கும், கடற்படையினருக்கும் அறிவித்துள்ளனர்.
கடற்படையினர் கடற்றொழிலாளர்களைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த இழுவைப் படகுகளால் அந்தக் கடற்பரப்பில் போடப்பட்ட 20க்கும் மேற்பட்ட நண்டுவலைகள் முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.