ஆசிரிய சங்கங்களின் ஜனநாயக போராட்டங்களை அடக்க நினைப்பது அரசுக்கு ஆபத்தையே விளைவிக்கும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் என்பவர்கள் நாட்டின் முதுகெலும்புகள் அந்த ஆசிரியர்களின் பொருளாதாரம் ஈடாடும் நிலைக்கு பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்துதரும் படி காலம்காலமாக ஆசிரிய சங்கங்கள் போராடுகின்ற பொழுதும் இதுவரையில் எந்த பலனும் கிடைக்கவில்லை. மாறாக இந்த அரசு ஜனநாயக போராட்டத்தை நசுக்கி ஒட்டுமொத்த ஆசிரியர்களின் மனங்களை சிதைத்து சின்னாபின்னம் ஆக்கியுள்ளது.
இலங்கையிலே சம்பளம் குறைந்த அரசதொழில் ஆசிரிய தொழிலா என கேள்வி எழும் அளவுக்கு சம்பளம் கீழ்மட்டத்தில் உள்ளது. ஒரு பவுணின் விலை 120000ரூபா ஆனால் ஆசிரியரின் அடிப்படை சம்பளம் இதற்க்கு கிட்டநிற்க முடியாதளவிற்கு கீழ்மட்டத்தில் உள்ளது. நாட்டிலே அறிவுசார் சமூகத்தையும் நற்பிரஜைகளையும் உருவாக்கும் ஆசிரியர்களின் சம்பளம் குடும்ப பொருளாதாரத்தை ஈடாடவைத்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் உள அழுத்தத்திற்க்கு உள்ளாகி விருப்புடன் கற்றல் செயல்பாட்டில் ஈடுபடமுடியாத சூழலை அரசு உருவாக்கியுள்ளது இதனை அரசு தொடர்ச்சியாக செவிசாய்க்க மறுத்து வருகின்றது. இவ்வாறான சூழலில் போராட்டத்தை முன்னேடுத்த ஆசிரிய சங்கங்களின் செயலாளர்களை தனிமைப்படுத்தியதை வன்மையாக கண்டிப்பதுடன் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு எல்லா ஆசிரிய சங்கங்களும் ஒரணியில் திரண்டு எமது கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும்.
இல்லையேல் ஆசிரியர்களின் குடும்பங்கள் வீதியிலலே நிற்க வேண்டிய சூழல் வெகு விரைவில் உருவாகும். இலங்கையிலே இரண்டு இலட்சத்தைதாண்டி ஆசிரியர்கள் உள்ளபோதும் உரிமைகளை வென்றேடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்