வவுனியா மாவட்டம் செட்டிகுளம் நகரப்பகுதியில் நேற்று இரவு அல்லது இன்று(நவம்பர் 30) காலை வயோதிபர்களான தம்பதியினர் இருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செட்டிகுளம் பிரதானவீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபாரநிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபாரநிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற போது குறித்த தம்பதியினர் வியாபாரநிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று (30) காலை வியாபார நிலையத்தை திறப்பதற்காக வந்த மகன் தனது தாயும் தந்தையும் இரத்த வெள்ளத்தில் கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைசேர்ந்த பசுபதிவர்ணகுலசிங்கம் (வயது 72) என்ற முதியவரும், அவரது மனைவியான கனகலட்சுமி (வயது 68) கனகலட்சுமி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது சடலங்களுக்கு அருகாக மூன்று கத்திகள் காணப்பட்டுள்ளன.
அவர்களிடம் இருந்த 5 பவுண் பெறுமதியிலான தங்க நகை ஒன்றும் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.