புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த கருணாகரன் முரளிதரன் எழினி அவர்களின் ஏழாவது (MAY 28) பிறந்த தினத்தினை முன்னிட்டு சூழலியல் மேம்பாடு அமைவனம் – Soozhagam – சூழகம் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு ஆலடி சந்தி மற்றும் வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் மரநடுகை மேற்கொள்ளப்பட்டது .
பூமிக்கு அதிகளவில் ஒட்சிசனை வழங்கக்கூடிய மரங்களிலொன்றான புங்கு மற்றும் மா போன்ற பத்து பயன்தரு மரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டதோடு தொடர்ந்து சூழகம் அமைப்பினரால் பராமரிக்கப்படவுள்ளன .
அத்தோடு செல்வி எழினியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 1500 “அறிந்திரன் ” சிறுவர் சஞ்சிகைகளை அன்பளிப்பு செய்துள்ளனர் அவரது பெற்றோர்களான முரளிதரன் & கார்த்திகா தம்பதியினர் .
செல்வி எழினியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு தீவகத்தில் வருடாந்தம் பல்வேறு பொதுநலன் செயற்பாடுகளை அவரது பெற்றோர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
சூழகம் நிறுவனம் எதிர்கால சந்ததியினரைக் கருத்திற் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தீவகங்களில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.