கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவை அடையாளப்படுத்தும் முகமாக நூற்றாண்டு நினைவிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு கலாசாலையின் அதிபர் தலைமையில் இன்று(ஜூன் 14) காலை
9.30 மணிக்கு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும் கோப்பாய் நவமங்கை நிவாச நிறுவுனருமாகிய சுவர்ணா நவரத்தினம் அவர்கள் நினைவிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்த நினைவிடம் அவரது உபயமாக அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது.