கொழும்பில் இருந்து கிளிநொச்சி கண்டாவளைக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டவர் ,
ஒக்டோபர் 25ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான Nடீ 9756 இலக்கப் பேருந்தில் பயணம் செய்து, அன்று மாலை 4.00 மணிக்கு வவுனியாவை சென்றடைந்துள்ளார்.
பின்னர் அதேதினம் மாலை 4.00 மணிக்கு வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட Nடீ 9899 இலக்க தனியார் பேருந்தில் பயணித்து கிளிநொச்சி பேருந்து நிலையத்தை மாலை 6.00மணிக்கு சென்றடைந்துள்ளார்.
பின்னர் கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து, முல்லைத்தீவு நோக்கி அதே தினம் மாலை 6.15 மணிக்கு புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான 0758 இலக்க பேருந்தில் பயணம் செய்து கண்டாவளையை அடைந்துள்ளார்.
எனவே குறித்த பேருந்துகளில் தொற்றாளியுடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பிற்குரிய 021 222 6666 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு விபரங்களை அறியத்தருமாறு வடமாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்…