செஞ்சிலுவைச் சங்கம் நெடுந்தீவு கிளையினரால் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆயத்த நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
அதன் பிரகாரம் நேற்றைய தினம் (ஜீலை 05) நெடுந்தீவு மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்கு கிளைத் தலைவர் திரு.எ.அருந்தவசீலன் அவர்கள் தலமையில் தொற்று நீக்கி மருந்துகள் விசிறப்பட்டதுடன், மாணவர்கள் கை கழுவுவதற்கான இயந்திரமும் பொருத்திக் கொடுக்கபடப்டது. அதே போல் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூர்p தொற்று நீக்கி மருந்துகள் விசிறப்பட்டதுடன் முதலுதவி உபகரணங்களும் வழங்கப்பட்டன.
கொவிட் 19 அனர்தத்தினைக் கருத்திற் கொண்டு பாடசலைகள் பொது இடங்கள் திணைக்களங்கள் என்பவற்றிற்கு தொற்று நீக்கி ஏற்பாடுகள் செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுக் கிளையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.