கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து நேற்றுமுன்தினம் மனித எச்சங்களும், உடைகளும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துமாறு முல்லைத்தீவில் நேற்று(ஜூலை 7)போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நேற்றுக் காலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘இலங்கை அரசே கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் முல்லைத்த்தீவு மாவட்ட பொதுமக்கள், பொது அமைப்புக்கள், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினர் இணைந்து கொண்டனர்.
‘சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையிலும், சர்வதேசக் கண்காணிப்பின் கீழும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இடம்பெறவேண்டும்’ என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.