குறிகாட்டுவான் துறைமுகப் பகுதியில் பொதுமக்களின் பாவனைக்கென குடிநீர் தாங்கி ஒன்று நேற்று(ஒக்ரோபர் 31) முதல் வேலணை பிரதேச சபையினரால் வைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் தங்குமடத்தில் இருந்து நெடுந்தீவு மக்கள் படகு ஏறச்செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த சேதமடைந்த கட்டுமானப் பகுதியும் உடைத்து சீர்செய்யப்பட்டு மக்களின் இலகுவான பயணத்திற்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இதுவிடயமாக கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கழமை காலை 7.30 மணியளவில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா குறிகட்டுவான் இறங்கு துறைக்கு நேரடியாக விஜயம் செய்து நெடுந்தீவு மக்கள் எதிர்நோக்குகின்ற கடற்போக்குவரத்துப் பிரச்சினைகள் மற்றும் துறைமுகப் பகுதி நடைமுறைகள் தொடர்பாக ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.