2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சுயேட்சைக்குழு 05ல் கேடயச் சின்னத்தில் போட்டியிடும் நீதி நியாத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான குழுவினரின் பிரமண்டமான பிரச்சாரக்கூட்டம் இறுதி நாளான இன்று (ஆகஸ்ட் 02) கிளி மத்திய கல்லூர்p மைதானத்தில் இடம் பெற்றது
தமிழத்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் பசுமைப்பூங்காவில் இடம் பெற்றது அதற்கும் நிறைந்த மக்கள் தொகை காணப்பட்டது ஆயினும் அதற்கு ஒப்பான விதத்தில் சுயேட்சைக்குழுவினது பிரச்சாரக் கூட்டத்திற்கும் மக்கள் அதிகமாக கலந்து கொண்டமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இம் மக்கள் கிளிநொச்சியில் ஒரு மாற்றத்தினை எதிர்பார்க்கின்றார்களா என்கின்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது அதனை கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களிலும் நடைபெற்ற கேடயச் சின்னத்தினுடைய பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் அதிகளவாக் கலந்து கொண்டமை யாவரும் அறிந்ததே