மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை நோக்கமாக கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி பன்னங்கண்டி, குஞ்சு பரந்தன், உருத்திரபுரம், கோரக்கன் கட்டு ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைச்சரால் இன்று (செப்ரெம்ர் 13) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீண்டும் குடியேறியுள்ள கிளிநொச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் சுமார் 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் ஒவ்வொன்றும் தலா 42 லட்சம் ரூபா செலவில் உருவாக்கப்பட்டு வரும் குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களில், முதல் கட்டமாக இன்று 5 சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், ஏனையவை எதிர்வரும் மாதமளவில் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.