காரைநகர் பிரதேச சபையின் கீழ் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிதியில் 2023/2024 ஆண்டுகளில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பான மக்கள் கருத்தறியும் கலந்துரையாடலின் இரண்டாம் கட்டம் சனிக்கிழமை (30.09.2023) மதியம் 2 மணியளவில் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
முதலாம் கட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும் என சபைச் செயலாளர் அறிவித்துள்ளார்.