கறுவாச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் கிளிநொச்சியில் செயன்முறை விளக்கம் வழங்கப்பட்டதுடன், கறுவா விதைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜெயசிங்க மற்றும் கறுவா ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளம் பகுதியில் நடுகை செய்யப்பட்ட கறுவா மரங்கள் உரிய வளர்ச்சியடைந்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் கறுவாச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.