தீவகம் ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்த கடற்தொழிலுக்கு சென்று தவறி வீழ்ந்த வயோதிப மீனவரின் சடலம் காங்கேசன் துறை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஊர்காவற்துறை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்காக சென்ற 72 வயதுடைய மீனவர் கடலில் தவறி வீழ்ந்துள்ளார் அவரை சக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இரண்டு நாட்களாக கடலில் தேடிய போதிலும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை
இந்நிலையில் இன்று காலை காங்கேசன் துறைக் கடற்பரப்பில் வயோதிபரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன