ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரர்கள் கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் கடந்த 1 ஆம் திகதி அவர்களது 93 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினர்.
லேரி ஆல்டன் பிரௌன் (Larry Alden Brown), லோன் பெர்னார்ட் பிரௌன் (Lon Bernard Brown), ஜீன் கேரல் பிரௌன் (Gene Carol Brown) ஆகியோர் 1930ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கான்ஸஸ் (Kansas) மாநிலத்தில் பிறந்தனர்.
ஒரே பிரசவத்தில் பிறந்து 93ஆவது பிறந்தநாளை எட்டியுள்ள ஆக வயதான மூவர் எனும் பெருமை அவர்களைச் சேரும்.
மூவரும் நெருக்கமான உறவு வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கான ரகசியத்தை லேரி கின்னஸ் உலகச் சாதனை அமைப்பிடம் தெரிவித்தார்.
“நாங்கள் புகைபிடித்ததில்லை. மது அருந்தியதில்லை, போதைப்பொருள் உட்கொண்டதில்லை. மூவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்திருக்கிறோம்,” என்றார் அவர்.
அந்தப் பதிவைக் கண்டு மனம் நெகிழ்ந்த இணையவாசிகள் அவர்கள் மூவருக்கும் பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்தனர்.