புங்குடுதீவு உலக மையம் அமைப்பினரால் புங்குடுதீவில் ஊடரங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன .
கொழும்பு 13 னை வசிப்பிடமாக கொண்ட உயர்திரு. ராசையா சிவலிங்கம் அவர்களின் ரூபாய் 30000 நிதியுதவி ஊடாக புங்குடுதீவு கிராமத்தில் வாழ்ந்துவருகின்ற பல முதியோர்களுக்கும் , கொரோனா தொற்று அபாயம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட சில குடும்பங்களுக்கும் புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் உலருணவு பொருட்கள் , சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .