யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 07) இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்கள் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி விடுத்த அழைப்பினைத் தொடர்ந்து, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இச்சந்திப்பில் கலந்துகொண்டது.
இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முருகேசு சந்திரகுமார், சி. ரவீந்திரா மற்றும் கூட்டணியின் பொதுச் செயலாளர் நா. இரட்ணலிங்கம் ஆகியோரும் பங்கேற்றனர்.

