கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவர் பிரசவித்த இரட்டை சிசுக்களை மண்ணில் புதைத்ததாக பொலிசாருக்கு வாக்கு மூலம் வழங்கினார்.
பிரமந்தனாறு பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பிரசவித்தமைக்கான சான்றுகள் காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கு சென்ற கிளிநொச்சி பொலிசார் அங்கு மேற்கொண்ட விசாரணையில் தனக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது எனவும் காட்டுப்பகுதிக்கு சென்று குழந்தை பிரசவித்தாகவும், வெட்கத்தின் காரணமாக சிசுக்களை மண்ணில் புதைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆயினும் புதைக்கப்பட்ட இடத்தினை சரியாக தகவல் வழங்காத போதும் தேடுதலின் பின்னர் இரண்டு சிசுக்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
அந்த பெண்ணுக்கு வளர்ந்த பிள்ளைகள் உள்ளதாகவும், கணவர் இல்லாத நிலையில் குழந்தை பிரசவித்தால் வெட்கத்தினால் குழந்தையினை மண்ணில் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.