இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறிமீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள்ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் மேலும் ஒரு மீனவருக்கு இரண்டரைஇலட்சம் ரூபா தண்டப் பணமும் விதித்து விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான்வெள்ளிக்கிழமை (மார்ச்07) மாலை தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதே நேரம் நபர் ஒருவர் அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்பிற்குள்நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் இரண்டாவது தடவையாக ஈடுபட்டமைகண்டறியப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு 24 மாத சிறை தண்டனையும்விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த மாதம் (பெப்.23) தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 32 மீனவர்களில் நான்கு மீனவர்கள் முதல் குற்றத்துக்காக 10 வருடஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து50 ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டதுடன் ஏனைய மீனவர்களை எதிர்வரும் மார்ச் 14ம் திகதி வரைவிளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார்
அதே நேரம் கடந்த மாதம் (பெப்.02) கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களில்9 பேர் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்டசிறைத்தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஒருவர்இரண்டாவது தடவை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோதமீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதம் (பெப். 20) கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் முதல்குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் நபருக்குதலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் இலட்சம் ரூபா வீதம் தண்டப்பணம்விதிக்கப் பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும்எதிர்வரும் 14 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான்உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுHi