அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (பெப் 21) பிற்பகல் 2.00 மணிக்கு, வித்தியாலய முதல்வர் திரு. கோ. பத்மநாதன் தலைமையில், வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன.
பிரதம விருந்தினராக யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் திரு. நாகராஜா அம்பிகைபாகன் கலந்து கொண்டு, வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.
சிறப்பு விருந்தினராக ஜே/10 கிராம அலுவலர் திரு. வே. சசிகாந் கலந்து கொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக த. டினேஸ்குமார் (உரிமையாளர் – டினா மொபைல் சிற்றி), லயன். இ. மகிதரன் (அகில இலங்கை சமாதான நீதிவான்), எஸ். விக்கினேஸ்வரன் (உரிமையாளர் – விக்கி லேணஸ்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த போட்டி நிகழ்வில் அயற்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.