அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு -2025 வித்தியாலய முதல்வர் கோ.பத்மநாதன் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (பெப். 21) பி.ப.2.00 மணிக்கு வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்- தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர். நா.அம்பிகைபாகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தீவக தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் வே.தனேஸ்குமார் , அல்லைப்பிட்டி ஜே/ 10 கிராம அலுவலர் ம.சசிகாந் ஆகியோருடன் கௌரவ விருந்தினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.