அனலைதீவில் இருந்து நேற்று முன்தினம்(ஜூன்10) மாலை 5.00 மணியளவில்கடற் கடற்தொழிலுக்கு சென்று காணாமற் போன இருவரும் தமிழக மீனவர்களால் மீட்கப்பட்டு கோடியாக்கரை காவற்றுறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடற்தொழிலுக்கென இருவரும் இணைந்து சென்ற வெளியிணைப்பு இயந்திரப்படகின் இயந்திரப் பாகம் ஒன்று உடைந்த காரணத்தினாலேயே கரை திரும்ப முடியாமல் கடல்நீருடன் அடித்து செல்லப்பட்ட வேளையில் இன்று அதிகாலை இந்திய கோடியாக்கரை நாட்டுப்படகு மீனவர்களால் மீட்கப்பட்டு கோடியாக்கரை காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அனலைதீவில் உள்ள குடும்பத்தினருடன் காணொளி தொலைபேசி அழைப்பினூடாக தொடர்பு கொண்டு தாம் நலமுடன் இருப்பதாக தெரிவித்ததாக குடும்ப உறுப்பினர்கள் எமக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அனலைதீவில் இருந்து நேற்று முன்தினம்(ஜூன்10) மாலை 5.00 மணியளவில்கடற் கடற்தொழிலுக்கு சென்ற அனலைதீவைச் சேரந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரும் இதுவரை கரைதிரும்பவில்லை என நேற்று காலைமுதல் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்கள் உயிருடன் இருக்கும் செய்தி அறிந்த உறவினர்கள் காணமற்போன உறவுகள் தொடர்பிலான செய்தியினை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.