முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டுப்பிரஜைகளில் 12 பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் முயற்சியுடன் மியன்மாரிலிருந்துபடகில் பயணித்த 103 பேர், அண்மையில் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்பகுதியில் படகு திசைமாறி வந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர்.
இவர்களை மீட்ட அப்பகுதி மீனவர்கள், அவர்களுக்கத் தேவையான உணவு, உலர்உணவுப் பொதிகளை வழங்கியதோடு, சம்பவம் தொடர்பாககடற்படையினருக்கும் அறியப்படுத்தியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த மியன்மார் நாட்டு மக்கள் நேற்று முன்தினம் தினம்கடற்படையினரால் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டு, மருத்துவபரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.
குறித்த படகில் 25 சிறார்களும், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 30 பெண்களும் இருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 3 படகுகளில் மியன்மாரிலிருந்து வருகைத் தந்திருந்த நிலையில், சீரற்ற காலநிலையால் 2 படகுகள் பழுதடைந்ததையடுத்து, ஒரு படகில் தங்களின்பயணத்தை ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மியன்மார் பிரஜைகள்தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் பிற்பகல் இவர்கள்திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதுஇவர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, இவர்களை விளக்கமறியலில்வைக்காமல், தடுப்பு முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
இவற்றை ஆராய்ந்த திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிபதி அப்துல்சலாம்சாஹிர், சட்டவிரோதமான இந்த பயணத்துடன் தொடர்புடைய 12 பேரையும்விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து ஏனையநபர்களை மிரிஹான அகதிகள் முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கைஎடுக்கமாறும் பணிப்புரை விடுத்தார்.
எனினும், குறித்த முகாமில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தினால், திருகோணமலை, கந்தளாய், ஜமாலியா மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாகஇவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.