வடக்கு மாகாண மகளிர் விகாகார அமைச்சுக்கு வெறும் சொற்ப நிதியான 84 இலட்சம் ரூபாய் நிதி மாத்திரமே ஒதுக்கப்பட்டது. இந் நிதியின் ஊடாகவே பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம் என முன்னாள் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சரும், தமிழ் மக்கள் மக்கள் கூட்டணியின் வேட்பாளருமான திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் கருத்து தெரிவித்தார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இன்று இடம் பெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தான் முன்றரை வருடங்கள் வடக்கு மாகாண உறுப்பினராகவும் இறுதி ஒரு வருடம் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சராகவும் கடமையாற்றினேன். வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு என்பது வெறும் பெயரளவில் மாத்திரமே அதற்குள் ஒன்றுமில்லை. அதிகாரம், போதிய ஆளணி என்பன இல்லை கடந்த நல்லாட்சி அரசிடம் மகளிர் விவகார அதிகார சபையை உருவாக்க அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கான நான் பல தடவை முன்னாள் அமைச்சர் சுவாமிநாதனுடன் பேசியிருந்தேன். எனினும் எமது மக்கள் அரசிடம் கையேந்தி வாழ வேண்டும் எனும் மறைமுக நிலைப்பாட்டிலேயே அவர்கள் இருந்தனர்.
அதனை விட எமது மகாணசபைக்குள்ளும் ஆளும் கட்சிக்குள் எதிர்கட்சி இருந்தமையால் அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாமல் போனாது. இன்றைய சூழ்நிலையில் கட்சிக கொள்கைக்கு அப்பால் பெண்கள் ஒன்று சேர்ந்த செயற்பட வேண்டும் பெண் விடுதலை இல்லையேல் இன விடுதலை இல்லை எனத் தெரிவித்தார்.